பொலிஸ் மா அதிபர் அடங்கிய உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு!

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திப்பதற்கு அழைப்பு வீடுத்துள்ளார்.
அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, குறித்த காலப்பகுதியில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பத் தீர்மானித்துள்ளார். இழக்கப்பட்டுள்ள நம்பிக்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்கவும் இணைந்து கொள்ளவுள்ளார்.
Related posts:
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனால் முடியாதா? – வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன்!
தமிழில் தேசிய கீதம் பாடியமைக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வருகிறது!
ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் பத்திரத்தை கையளித்த பிரித்தானிய மற்றும் வடக்கு அயர்லாந்தின் உயர்ஸ்தானி...
|
|