பொலிஸ் மா அதிபருக்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது – இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிப்பார் என அறிவிப்பு!
Monday, October 2nd, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் புதிய காவல்துறை மா அதிபரை நியமிக்கவுள்ளார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
காவல்துறை ஆணைக்குழு சந்தன விக்கிரமரட்னவின் பதவிக் காலத்தை ஜூலை மாதம் 9 முதல் மூன்று மாத காலத்திற்கு நீடித்தது.
இதன்படி இந்த இரண்டாவது பதவிக்காலம் ஒக்டோபர் 9ம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்தநிலையில், புதிய காவல்துறை மா அதிபரை ஜனாதிபதி நியமிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
000
Related posts:
யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
கோர விபத்து; வீதியில் உறங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கிப் பலி!
பெண் தொழில்முனைவோருக்கான சிறந்த சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது அவசியம் - வடக்கு மாகாண ஆளுநர் ...
|
|
|


