பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்பு!
Thursday, June 1st, 2023
தேவையற்ற நபர்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பணிகளில் இருந்து நீக்கி உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
தற்போது, மக்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக சுமார் 5,400 பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
எனவே அந்த மக்களுக்கும் இடங்களுக்கும் பாதுகாப்பு தேவையா என்பதைக் கண்டறிந்து அதனை மதிப்பீடு செய்யுமாறு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கைதடியில் இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்!
கவனிப்பாரற்றுக் கிடந்த பெருந்தொகை திரிபோஷா!
நாளை 3 மணி நெர மின்வெட்டு - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தகவல்!
|
|
|


