பொறுப்பற்று செயற்படுகின்றது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் – தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றச்சாட்டு!

Friday, July 19th, 2024

உள்நாட்டு இறைவரித்  திணைக்களம் பொறுப்பற்று செயற்படுவதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்திற்கு வசூலிக்கப்பட வேண்டிய ஆனால் இதுவரை அறவிடப்படாத வட் வரி தொடர்பில் விசேட கணக்காய்வு அறிக்கையை வெளியிடும் போதே தேசிய கணக்காய்வு  அலுவலகம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் அறவிடப்பட வேண்டிய வெட் வரி உரிய காலத்தில் வசூலிக்கப்படாமையினால்  பொதுமக்கள் ஏற்கனவே தியாகம் செய்து அரசாங்கத்திற்கு வருமானமாக செலுத்திய வரியில் பெருமளவிலான வருமானம் தவறாகப் பயன்படுத்தப்படும் அல்லது அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தனது கடமைகளை உரிய நேரத்தில் மற்றும் அதிகபட்ச வினைத்திறனுடன் நிறைவேற்றத் தவறியதே அரசாங்கத்திற்கு  இந்த வரிப்பணம் இழப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: