பொருளாதார நெருக்கடி – மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!.
Tuesday, April 16th, 2024பொருளாதார நெருக்கடியில் இருந்து, மீள்வதற்காக இலங்கை முன்னெடுத்து வரும் மறுசீரமைப்பு பணிகள் மற்றும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளருமான கென்ஜி ஒகமுரா உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஆரம்பமான சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் அரையாண்டு மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இன்று அஞ்சல் வாக்கெடுப்பு ஆரம்பம்!
பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்கள் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
யாழ்ப்பாணம் - காரைநகர் வீதியில் போட்டிபோட்டு ஓடும் பேருந்துகள் - பீதியில் பயணிகள்!
|
|
|


