பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டு – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

கொரோனா நெருக்கடியால் தலைதூக்கிய பொருளாதார சவால்களை வெல்லும் ஆற்றல் அரசாங்கத்திற்கு உண்டென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் உரையாற்றிய அமைச்சர் கொவிட் வைரஸ் தொற்று நெருக்கடியால் சகல வருமான வழிவகைகளும் முடக்கப்பட்டுள்ளன.
எனினும் எத்தகைய நிலைமையிலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வருமானம், ஆடையுற்பத்தி சார் வருமானம், வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுப்பும் வருமானம் என்ற ரீதியில் சகல வருமானங்களும் குறைந்துள்ளன.
உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்படும் சாத்தியமும் உள்ளது. பயிர்ச்செய்கை பாழாகும் பட்சத்தில் ஆறு வகை பயிர்களுக்காக ஹெக்டயாருக்கு ஒரு இலட்சம் என்ற ரீதியில் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|