பொதுமக்களுக்காக கிராமிய அரசாங்கம் – அமைச்சர் கஜந்த கருணாதிலக!

பொதுமக்களை நேரடியாக நிர்வாகத்தில் இணைத்துக் கொள்ளும் வகையில் ‘கிராமிய அரசாங்ம்’ எனும் கொள்கையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கஜந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக கருத்து தெரிவிக்கையில் ,
கிராமிய அரசாங்க எண்ணக் கொள்கைப்பத்திர வரைபும் மற்றும் அலுவல் தொடர்பான விடயங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற குழுக்களின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
இதற்காகவேண்டி பிரதமர் அலுவலக இணையத்தளத்தில் இந்த விடயங்களை பிரசுரிப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரதிஅமைச்சர் அஜித்பெரேரா , சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
Related posts:
மீள் குடியேற்றம் செய்யப்பட்ட பலாலி, வளலாய்ப் பகுதிகளில் கல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட...
ஆழிக்குமரன் நினைவாக அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் திறப்பு!!
சுகாதார தொண்டர்களுக்கான மீள் நோ்முகத்தோ்வு 17ம்இ 18ம் திகதிகளில்!
|
|