பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் ஊழிர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்காப்பு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும் – அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்க செயலாளர் கோரிக்கை!
Thursday, April 23rd, 2020
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையாளர்களுக்கு கொரோனா தற்பாதுகாப்பு உபகரணங்களை வழங்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்க செயலாளர் சேபால லியனகே அவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் இலங்கை போக்குவரத்து சபையின் சேவையாளர்களுக்கு தேவையான முகக்கவசம், கையுறை மற்றும் மருத்துவ வசதிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
அத்துடன் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு விஷேட ஊக்குவிப்பு கொடுப்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த மாதம் பணவீக்கம் 7.9 சதவீதமாக அதிகரிப்பு!
வடக்கிலுள்ள சிகை அலங்கரிப்பு நிலையங்களை இரவு வேளையில் காலம் தாழ்த்தாது மூடுக!
மத்திய வங்கியின் முக்கிய தீர்மானம் !
|
|
|


