பொதுத் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு – கஃபே அமைப்பு தெரிவிப்பு!
Monday, August 3rd, 2020
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரையில் 900 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கஃபே அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதுவரையில் 920 முறைப்பாடுகள் கஃபே அமைப்புக்கு பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 142 முறைப்பாடுகள் தேர்தல் வன்முறைத் தொடர்பாக பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் வெறுப்பூட்டும் பிரசாரங்கள் மற்றும் பொய்யான பிரசாரங்களை மக்கள்மயப்படுத்துவது தொடர்பாகவே அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
Related posts:
மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவாக குறைப்பு!
75 வீத தேசிய பாடசாலைகளுக்கு அதிபர்கள் இல்லாத நிலை - இலங்கை ஆசிரியர் சங்கம்!
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் - பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவி...
|
|
|


