பேருந்துகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் 450 முறைப்பாடுகள்!
 Saturday, March 9th, 2019
        
                    Saturday, March 9th, 2019
            
போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் 450 முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.
பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்காக, ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.
பாதுகாப்பற்ற முறையில் பேருந்து செலுத்துதல், அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல் மற்றும் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
புலமைப்பரிசில் பரீட்சை மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 3ஆம் திகதிக்குள் சமர்ப்ப...
அவுஸ்திரேலியாவுக்குள் நுளைய அனுமதி - பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!
உலகெங்கம் இன்று சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்கள் - ஈ.பி.டி.பி இணையத்தளமும் வாழ்த்துகிறது!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        