பேக்கரி உணவுகளை கிராமங்களுக்கும் விநியோகிக்க நடவடிக்கை – பேக்கரி உரிமையாளர் சங்கம்!
Saturday, March 28th, 2020
தற்போதைய அசாதாரண நிலைமையை கருத்திற் கொண்டு தோட்டப்புறங்களுக்கும், கிராமங்களுக்கும் பேக்கரி உற்பத்திப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி தோட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் முச்சக்கர வண்டிகள் மூலம் பேக்கரி உற்பத்தி உணவுவகைகளை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ஊரடங்குச்சட்டம் காரணமாக மக்களின் உணவுத்தேவையின் ஒருபகுதியாக பேக்கரி உற்பத்தி உணவுப்பொருட்களை அவர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் வகையிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருக்கிறது.
Related posts:
இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!
கொரோனா கால பொது போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
சந்நிதியான் ஆலய வளாக கடை உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா!
|
|
|


