பெல்ஜியம் தாக்குதலுக்கு இலங்கை ஜனாதிபதி கவலை!

Wednesday, March 23rd, 2016

பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸில் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவம் குறித்து பெல்ஜியம் அரசிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதலில் இலங்கையர்கள் எவரும் இருக்கவில்லை என்று பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். எனினும் அது தொடர்பாக மேலும் ஆராயப்படுவதாக பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவர் ரொட்ணி பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பெல்ஜியம் அரசிற்கு ஜனாதிபதி விடுத்துள்ள விஷேட அனுதாப செய்தியில், கொடூரமான பயங்கரவாத தாக்குதல் செய்தி அறிந்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.  அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒருமித்த தீர்வைத் தேடுவதன் அவசியம் இதன்மூலம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

Related posts: