பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது!
Wednesday, November 14th, 2018
நாடாளுமன்றம் இன்று(14) காலை 10.00 மணிக்கு கூட்டப்படும் என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி, இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூட்டப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார்.
எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அமர்வில் கலந்துகொள்ளுமாறு சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை இன்று காலை 8.30 மணிக்கு கட்சித் தலைவர்களுக்கான கூட்டம் இடம்பெற உள்ளதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Related posts:
சினிமா திரையரங்குகளை திறக்க அனுமதி - கலாச்சார விவகார அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!
அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு - நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன...
யூரியா உரத்தை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உர நிறுவனங்களு...
|
|
|


