பெரியபுலவு மகா வித்தியாலய மாணவிகள் துஷ்பிரயோகம் : ஆசிரியர் கைது!
 Wednesday, June 22nd, 2016
        
                    Wednesday, June 22nd, 2016
            யாழ்ப்பாணம் பெரியபுலம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர், அந்தப் பாடசாலையில் கல்விகற்கும் மாணவிகள் ஐவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து குறித்த ஆசிரியர் சற்று முன்னர் சிறுவர் நன்னடத்தை பிரிவிவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியரை சிறுவர் நன்னடத்தை பிரிவி அதிகாரிகள் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் அவர் நீதிமன்றில் அயர்ப்படுத்தப்படவுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சம்பவத்திதை மூடமறைக்க முற்பட்ட அதிபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக பெற்றோரால் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றைய ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தெடர்பான ஆசிரியரை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரி பெற்றோர்கள் இன்று பாடசாலையில் சூழலில் போராட்டம் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        