பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பொருத்தமான சூழலை ஊருவாக்கி தாருங்கள் – மட்டு மாவட்ட மகளிர் அமைப்பினர் ஈ.பி.டி.பியிடம் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் அடிப்படை பிரச்சினைகளை கருத்திற்கொண்டு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த பொருத்தமான திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி தருமாறு வட்டு மாவட்ட மகளிர் அமைப்பினரால் ஈ.பி.டி.பியின் மாவட்ட நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஆரையம்பதியில் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் அமைப்பினரது கூட்டத்தின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்டு யுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் தமது குடும்ம தலைவரை இழந்த நிலையில் பல்வேறு இன்னல்களுடன் வாழ்ந்துவருகின்றனர்.
ஆனாலும் குறித்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவரும் இதுவரை முன்வந்திருக்கவில்லை. அந்தவகையில் கடற்றொழில் அமைச்சராக தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களூடாக குறித்த பெண்களின் குடும்ப வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு ஏற்றவகையான திட்டமொன்றை உருவாக்கி தந்து அக்குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனல்.
குறித்த கோரிக்கையை கருத்திற்கொண்ட மட்டு மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நிர்வாகத்தினர் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்தக்கு கொண்டு சென்று காலக்கிரமத்தில் தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|