புலிகளுக்கு ஆதரவானோரின் அழுத்தங்களை கணக்கில் எடுக்கவேண்டாம் – அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது அஸ்கிரிய பீடம்!

விடுதலைப்புலிகளுக்குச் சார்பான தரப்பினர் முன்வைக்கும் அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல், இன, மத, கட்சி பேதம் கடந்து இலங்கையர்கள் ஒன்றுபட வேண்டும் என அரசாங்கத்துக்கு அஸ்கிரிய பீடம் ஆலோசனை வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், அஸ்கிரிய பீடத்துக்கு சென்றபோதே, வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அஸ்கிரிய பீடம் அடியோடு நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கையர்கள் அனைவரும் ஒரு நாடாக ஐக்கியப்படாவிட்டால், எதிர்ச் சக்திகள் நன்மையடைந்துவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இலங்கை இராணுவத்தினர் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் அப்பாவி தமிழ் மக்களின் உயிர்களைக் காப்பாற்ற எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்பதை முழு உலகமும் கண்டது என்றும் சுட்டிக்காட்டியிருந்ததுடன் ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக கட்சி பேதங்களை மறந்து அனைவரும் அணி திரள வேண்டும் என்றும் மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|