புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தை – ஜனாதிபதியின் உத்தரவை நடைமுறைப்படுத்தும் வெளிவிவகார அமைச்சர்!
Saturday, October 30th, 2021
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜிஎல்பீரிசை ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் ஜனாதிபதி தன்னை புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் தமிழ்தேசிய கூட்டமைப்பை தொடர்புகொள்ள முயல்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் சிலரை விடுதலை செய்துள்ளது பயங்கரவாத தடைச்சட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார பொதுநலவாய அமைச்சர் எலிசபெத் டிரஸினை சந்தித்தவேளை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


