புலமைப் பரிசில் பரீட்சை தேவையில்லை – கல்வி அமைச்சர்!

Thursday, September 28th, 2017

தற்போது நடைமறையில் உள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பிள்ளைகளுக்கு தேவையில்லை என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றிருந்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் கல்விப் பொதுத்தராதர உயர்தரம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளில் தற்போது செய்யப்பட்டு வரும் மறுசீரமைப்புக்களின் பின்னர், தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சை குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை அம்மாக்களுக்கான பரீட்சையாகவே அமைந்துள்ளது, மாணவ மாணவியருக்கு இந்த பரீட்சை தேவையில்லை.எதிர்காலத்தில் அம்மாக்களுக்கான பரீட்சைக்கு வேலி போடப்படும்.எதிர்காலத்திற்கு செல்ல வேண்டிய கடவுச்சீட்டு கல்வியேயாகும்.எனவே அந்த கடவுச்சீட்டில் இடப்படும் வீசாக்கள் மிகவும் நிதானமான தீர்மானங்களின் அடிப்படையிலான வீசாக்களாக இருக்க வேண்டுமென அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்

Related posts:

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் நாடு முன்னேற்றம் கண்டுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு!
எரிபொருள் விநியோகத்தில் யாழில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை – தவறான பொறிமுறையால் எரிபொருள் நிரப்பு ந...
அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துங்கள் - அனைத்து மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தல...

இலங்கையில் 11 ஆவது கொரோனா தொற்றாளர் மரணம் பதிவானது - சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!
கட்டண திருத்தம் தொடர்பில் பேருந்து தொழிற்சங்கங்களுக்கும் போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையில் மற்ற...
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களைத் தடுக்க ஐ.நாவின் தலையீடு...