புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135வது பிறந்ததின நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில்!
Tuesday, December 12th, 2017
புரட்சிக்கவி மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 135வது பிறந்ததின நினைவு நிகழ்வு இன்று யாழ் துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது
யார் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு துணை தூதுவர் ஏ.நடராஜா தலைமையில் இடம்பெற்றது.
கலைகலாச்சார நிகழ்வுகள் பாரதியார் சொற்பொழிவுகள் என்பன இங்கு மேடையேற்றப்பட்டதுடன் பாரதியார் நினைவுதினத்தை முன்னிட்டு யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களும் சான்றிதல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன் சர்வமத தலைவர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
Related posts:
தீவுப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக கற்றாளை செய்கை !
தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் கேபிள் இணைப்பு வயர்களை அகற்றியது!
தொற்றாநோயால் பாதிக்கப்படுவோர் தொகை அதிகரிப்பு - சுகாதார அமைச்சு!
|
|
|


