புத்தாண்டு காலத்தில் விபத்துக்களை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களுக்க அறிவுறுத்து!
Wednesday, April 13th, 2022
புத்தாண்டு காலத்தில், விபத்துக்களைக் குறைப்பதற்கு, நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலத்தில், பட்டாசு உட்பட கேளிக்கை வெடிகள் மூலம் ஏற்படும் விபத்துக்கள் அதிகளவில் பதிவாகுவதாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் புஷ்பா ரம்யாணி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
வீடுகளில் தற்போது பெற்றோல் சேமித்து வைக்கப்படுகின்ற நிலையில், தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக, பெற்றோலைப் பயன்படுத்தியமையால் விபத்து ஏற்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின், பயிற்றுவிப்பு தாதிய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஒரு வருடத்துக்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு தீர்மானம...
உணவு பாதுகாப்பு சட்டத்தை தீவிரமாக அமுல்ப்படுத்த நடவடிக்கை!
அடுத்த சில மாதங்களில் கடன் மீளப்பெறும் இலக்கானது 400 மில்லியனைத் தாண்டும் - தேசிய வீடமைப்பு அபிவிருத...
|
|
|


