புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு – நிதியமைச்சர்!

அடுத்தவாரம் முதல் ஸ்வீட் ஹோம் என்ற புதிய வீடமைப்பு கடன் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.
புதிதாக திருமணமான இளம் தம்பதியினருக்கு வீடொன்றை பெற்றுக் கொள்வதற்காக ஸ்வீட் ஹோம் வீடமைப்பு கடன் திட்டம் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் குறித்த புதிய கடன் திட்டமானது அடுத்தவாரம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது 6.75 சதவீத வட்டிக்கு ஆக கூடிய தொகையாக 10 மில்லியன் ரூபாவை கடனாக பெற்று கொள்ள முடியும் என்பதுடன், இதனை இளம் தம்பதியினர் 25 வருடங்களில் திருப்பி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!
மாணவர்களுக்கு 13 ஆண்டுகள் கட்டாயக் கல்வி – அமுலுக்கு வரவுள்ளது புதிய சட்டம்!
சுகாதார அமைச்சு விடுத்துள்ளது அவசர எச்சரிக்கை!
|
|