புதிய முறையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் செப்டெம்பரில் நடத்தப்படும்?
Saturday, February 24th, 2018
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்துள்ளார்.
தற்போது கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடக்கு, மத்திய மற்றும் வடமேல் ஆகிய மாகாண சபைகளின் ஆயுட்காலம் முடிவுக்கு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கட்ட மாகாண சபைத்தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
மேலும் புதிய முறையிலேயே மாகாண சபைத் தேர்தலையும் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சமூக வலைத்தளத்தில் தகவல் பரிமாற்றம் இலங்கை சட்டத்திற்கமைய குற்றமல்ல - சட்டத்தரணி மஹாநாமகே !
கடந்த ஆட்சிக்காலத்தில் முறையற்ற விதத்தில் பதிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற அமைப்புகள் குறித்து விசாரணை...
அரசாங்க ஊழியர்களின் கடன் சலுகைகள் நேற்றுடன் நிறைவு - அரச நிர்வாக அமைச்சின் செயலாளர்!
|
|
|


