புதிய நியமனங்கள் அனைத்தும் இரத்து!
Friday, November 23rd, 2018
மறு அறிவித்தல் வரும்வரை அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளுக்குப் புதிய நியமனங்களை வழங்கவேண்டாம் என ஜனாதிபதி செயலகம் அனைத்து அமைச்சுக்களுக்கும் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் நேற்று விடுவித்துள்ள விசேட சுற்றறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அரச திணைக்களங்களில் தலைவர்கள் மற்றும் இயக்குநர்கள் சபைகளில் வெற்றிடங்கள் காணப்பட்டால் அதற்காக அமைச்சின் மேலதிக செயலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் அல்லது ஓய்வு பெற்ற தகைமை உள்ள அரச அதிகாரி ஒருவர் அல்லது சிரேஷ்ட அதிகாரி ஒருவர் அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத வகையில் நியமிக்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதமர் – அமைச்சரவை – பொதுநிர்வாக அமைச்சு நிதி அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


