புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் – நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!

புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக இந்த புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்துக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கும் நோக்கில், சட்டமூலம், அமைச்சரவை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரில்புள்ளே மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் டி இந்திரதிஸ்ஸ ஆகியோரின் இணைத் தலைமையுடன் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால், தேசிய பாதுகாப்பு சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த மாணவர்கள், அதிபர்கள் கெளரவிப்பு!
தொண்டைமானாறு உவர் நீர் தடுப்பணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம்15ம் திகதிக்கு முன்னர் நிறைவடைய...
ஐ.நா மனித உரிமைப் பேரவை கூட்டத் தொடர் ஆரம்பம்!
|
|