புதிய துணைவேந்தரிடம் பல்வேறு எதிர்பார்ப்புகள் – யாழ். பல்கலை சமூகம் தெரிவிப்பு!

Wednesday, April 19th, 2017

மாண­வர்­க­ளுக்­குத் தேவை­யான அடிப்­படை வச­தி­கள் இன்­ன­மும் பூர்த்தி செய்­யப்­ப­டா­மல் இழுத்தடிக்­கப்­பட்டு வரு­கின்­றன. புதி­தாக பத­வி­யேற்­கும் துணை­வேந்­தர் இந்­தக் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­வார் என மாண­வர்­கள் எதிர்­பார்ப்­ப­தாக யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழ­கக் கலைப்­பீட மாண­வர் ஒன்­றி­யத் தலை­வர் ரஜீ­வன் தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்ததாவது,

இப்­போது பல்­க­லைக்­க­ழ­கப் பட்­டப்­ப­டிப்பு முடிந்­த­வு­டன் வெளியே வேலை செய்­வ­தற்கு கணனி மற்றும் ஆங்­கில அறிவு தேவைப்­ப­டு­கின்­றது. அதனை முறை­யா­கக் கற்­ப­தற்­குத் தனித்­தனி அலகுகள் வேண்­டும். உள்­ளக விளை­யாட்­டில் எமது மாண­வர்­கள் பிர­கா­சிக்க வேண்­டு­மா­யின் அதற்­கான பயிற்­சி­யைப் பெறு­வ­தற்கு உள்­ளக விளை­யாட்­டுத் திடல் வேண்­டும்.

சிறப்­புத் தேவைக்­கு­ரிய மாண­வர்­கள் பயன்­ப­டுத்­தும் கற்­றல் சாத­னங்­கள் முழு­மை­யான தொழிற்பாட்டை வெளிப்­ப­டுத்­தக் கூடிய வகை­யில் திருத்தி அமைக்­கப்­ப­ட­வேண்­டும். அரசியல்துறை பாடம் உட்­ப­டச் சில பாடங்­க­ளுக்­கான விரி­வு­ரை­யா­ ளர்­கள் வெற்­றி­டம் இன்­ன­மும் நிரப்­பப்­ப­ட­வில்லை. விடு­தி­க­ளில் உள்ள மல­சல கூடங்­களை உரிய முறை­யில் சீர்செய்யவேண்டும்­ –  என்­றார்.

புதிய துணை­வேந்­தர் பத­வி­யேற்பு தொடர்­பாக பல்­க­லைக்­க­ழக ஊழி­யர் சங்­கம் தெரி­வித்ததா­வது,

கல்வி சாரா ஊழி­யர்­க­ளின் பெரும்­பா­லான நிய­ம­னங்­கள் கடந்த 10 வரு­டங்­க­ளாக அர­சி­யல் மற்­றும் அர­சி­யல்­வா­தி­க­ளின் தலை­யீட்­டி­லேயே நடை­பெற்று வரு­கின்­றன. இதனால் திற­மை­யா­ன­வர்­கள்  கூட நேர்­மு­கத் தேர்­வில் வெளி­யேற்­றப்­ப­டும் நிலை காணப்­ப­டு­கின்­றது. நாம் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் ஓர் அங்­க­மாக இருப்­ப­தால் எமது சம்­பள உயர்வு சார்­பான விட­யங்­க­ளைக் கருத்திற்கொள்ள வேண்டும்.

இப்­போது அனைத்து பீடங்­க­ளி­லும் வெளி­மா­வட்ட மற்­றும் சிங்­கள மாண­வர்­க­ளின் எண்­ணிக்­கைப் பரம்­பல் 50 வீதத்­தி­லும் அதி­க­மாக உள்­ளது. தமிழ் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்து செல்கின்றது. எனவே இது தொடர்­பா­க­வும் புதி­தாக பத­வி­யேற்­கும் துணை வேந்­தர் கவ­னத்­திற் கொள்­ள­வேண்­டும் -­ என்­ற­னர்.

Related posts: