புதிய ஆண்டுக்கான பாடப்புத்தக விநியோக நடவடிக்கை ஆரம்பம்!

அடுத்த வருடத்தை முன்னிட்டு இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 2020 ஆம் ஆண்டுக்கான பாடப்புத்தகங்களை இந்தத் தடவை, மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னர் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
இதனைத் தவிர, ஆசிரியர்களுக்கான கையேடுகளும் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து தேசிய பாடசாலைகள் மற்றும் 1 500 க்கும் அதிக மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்காக, கல்வி வௌியீட்டு திணைக்களத்தினூடாக பாடப்புத்தகங்கள் மற்றும் ஆசிரியர் கையேடுகள் வழங்கப்படவுள்ளன.
ஏனைய அனைத்து பாடசாலைகளுக்குமான 2020 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்கள், நாடு முழுவதுமுள்ள பணிமனைகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள விநியோக நிலையத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
|
|