புகையிரதம் மீது கல்வீச்சு சம்பவம் தொடர்பில் மூவர் கைது.!
Thursday, August 18th, 2016
களனிவெளி புகையிரத பாதையில் அவிசாவளையில் இருந்து புறக்கோட்டையை நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் புகையிரதம் மீது கல்லெறிந்தார்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.
இது தொடர்பாக தெரியவருகையில் –
அவிசாவளையில் இருந்து புறக்கோட்டையை நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்த பாடசாலை சேவை புகையிரதம் மீது நாரஹேன்பிட்டியில் வைத்து இளைஞர்கள் 3 பேர் கல்லெறிந்துள்ளனர். 16,17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கல்லெறிந்ததாக சந்தேகத்தின்பேரில் நாரஹேன்பிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நாரஹேன்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
இவர்களின் கல்லெறி தாக்குதலில் புகையிரதத்தின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளதுடன் விளையாட்டுத்தனமாகவே கல்லெறிந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின்போது இவர்கள் தெரி வித்துள்ளனர். சந்தேக நபர்கள் இன்றைய தினம் புதுக்கடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Related posts:
அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!
பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளது கொழும்புத் துறைமுகம்!
விடுமுறை காலத்தில் விசேடமாக புகையிரதங்கள் சேவையிலீடுபாடு!
|
|
|


