பிரிட்டனில் பிரபல்யம் பெற்ற இலங்கை உணவுகள்!
Thursday, January 24th, 2019
2019ஆம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவு வகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது.
லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப்படும் ஆசியா ரேஞ்சு வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை.
முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் ‘தி குரோஸ்ர்’ பத்திரிகையின், பிரபலமாகும் உணவுகள் பக்கத்தின் ஆசிரியர் ஏமா வாட்சன்.
Related posts:
இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி!
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு - வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!
இந்திய துணைத்தூதுவர், வடக்கு மாகாண ஆளுந சந்திப்பு - இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரும் ஆளுநருடன் கல...
|
|
|


