பிராந்தியத்தின் அமைதியே எமது விரும்பம் – பிரதமர் ரணிலிடம் நவாஸ் செரீப் எடுத்துரைப்பு!

Thursday, January 19th, 2017

தெற்காசியாவில் ஸ்தீரமான நிலை நீடிப்பதையே தமது நாடு விரும்புகின்றது என இலங்கையிடம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் எடுத்துரைத்துள்ளார்.

சுவிட்ஸர்லாந்தின் டவோஸ் நகரில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே நவாஸ் செரீப் இதனைத் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் வறுமையை ஒழிப்பதற்கும் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பு மற்றும் ஸ்தீரத்தன்மை முக்கியமானவை என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

பிராந்தியத்திலுள்ள அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியான உறவுகளையே பேணுவதற்கு தமது நாடு விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் கூறியுள்ளார். பிராந்திய ஒத்துழைப்பு இனிமையானதாக இருக்க வேண்டும் என்பதே பிராந்திய நாடுகளிலுள்ள மக்களின் விரும்பம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார்க் அமைப்புக்கு பாகிஸ்தான் மகத்தான முக்கியத்துவத்தை வழங்குவதாகவும் அதன் சாசனத்தின் இலக்குகளை அடைவதில் உறுதியாக உள்ளதாகவும் நவாஸ் செரீப் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் வர்த்தக துறைகளில் பாகிஸ்தானுடனான ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு விரும்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாகிஸ்தான் பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.

download

Related posts:

அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தாருங்கள்   ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவனாதனிடம் அக்க...
யாழ்ப்பாண நகரப் பகுதியில் மலேரியாவை பரப்ப கூடிய நுளம்பு கண்டுபிடிக்கப்பட்டமை அபாயகரமானது - வட மாகாண ...
இன்றுமுதல் வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு - சில இடங்களில் பிற்பகலில் அல்...