பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி அமைச்சரவையில் யோசனை!

Friday, April 6th, 2018

பாடசாலை நாட்களில் முன்னெடுக்கப்படும் தனியார் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யக் கோரி ஆலோசனை ஒன்றினை அமைச்சரவையில் விரைவில் சமர்ப்பிக்க உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, பாடசாலை நாட்களில் தனியார் பிரத்தியேக வகுப்புக்கள் காலை 7.30 மணியில் இருந்து மதியம் 1.30 மணி வரையில் இடம்பெறுகின்றதாகவும், ஆதலால் மாணவர்கள் பாடசாலைக் கல்வியினை நாடாது தனியார் பிரத்தியோக வகுப்புக்களை நாடுவதாகவும் அமைச்சர் இதன் போது மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts: