பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் நியமனம்!

Saturday, July 20th, 2019

சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் ஒன்பது பேரை பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக பதவியுயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானம் எடுத்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ஒன்பது பேருக்கு இடைவெளி காணப்பட்டதாகவும், இதற்காக சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகள் விண்ணப்பித்திருந்ததாகவும் ஆணைக்குழு தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

நேர்முகப் பரீட்சைக்கு 14 பேர் கலந்துகொண்டதாகவும் நேர்முகப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் இவர்களது தெரிவு இடம்பெற்றுள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.

Related posts: