பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில் சாட்சியம்!

நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் சாட்சியமளிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06ம் திகதி அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்திருந்தார்.
அன்றைய தினம் சில அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன, அமைச்சரவை அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோரே இவ்வாறு சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
Related posts:
கொரோனா தொற்று அபாயம் முற்றுமுழுதாக நீங்கவில்லை – பரிசோதனைகள் தொடர்கின்றன - யாழ் போதனா வைத்தியசாலை ப...
உழைக்கும் மக்களின் பணத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் பொது மக்களுக்கு சுமையாகி விடக் கூடாது – ஜனாதிபத...
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின் நடுப்பகுதியில் தடுப்பூசிகள் கிடைக்கப் பெறும் - ...
|
|