பிரதமர் ரணில் இன்று வடபகுதி வருகை!
Sunday, May 27th, 2018
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் பெறுபேறுகள் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(27) வடபகுதி வருகைதந்துள்ளார்.
குறித்த வருகையின்போது யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் இந்த விஜயத்தின் போது முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் குறைநிறைகள் குறித்து நேரடியாக ஆராயப்படவுள்ளது.
இந்த விஜயத்தின் போது பிரதமர் தலைமையில் கிளிநொச்சியிலும், யாழ்ப்பாணத்திலும் இரண்டு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.
இதன்போது அமைச்சர்கள், பிரதியமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள், திறைச்சேரி மற்றும் வேறு சில அமைச்சுகளின் அதிகாரிகளும் பங்குகொள்ள உள்ளனர்.
Related posts:
ஆணைக்குழு கலைந்த பின்னர் தனியான பணியகம் அமைக்கப்படும் - மக்ஸ்வெல் பரணகம
குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க வருகிறது புதிய தொழில்நுட்பம்!
"செனல் 4" விவகாரம் - நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்ற...
|
|
|


