பிரதமர் தினேஷ் குணவர்தன – டென்மார்க் தூதுவர் Freddy Svane சந்திப்பு – இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தகவல்!

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் Freddy Svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு உறவுகள் மாற்றம் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
டென்மார்க் இலத்திரனியல் உற்பத்தி தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச நிதி வசதிகளின் முன்னேற்றம் குறித்து விளக்கிய பிரதமர், டென்மார்க் தூதுவர் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மேற்பார்வையாளர் மரணம்!
ஹியுமன் பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி அறிமுக நிகழ்வு
2020 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வரிச்சலுகை காரணமாக மொத்த வருவாயில் சுமார் 56 சதவீதமான வரு...
|
|