பிரச்சினைகளை தீர்ப்பதல்ல பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Friday, December 18th, 2020

பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது அரசியல்வாதிகளின் பொறுப்பு இல்லை என தெரிவித்துள்ள அமைச்சர் டளஸ் அழகப்பெரும பொதுமக்களின் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதே அரசியல்வாதிகளின் பொறுப்பு என தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் – அரசியல்வாதிகள் இருப்பது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அல்ல. பிரச்சினைகளை தீர்ப்பது அதிகாரிகளின் வேலை. அரசியல்வாதிகளின் பொறுப்பு என்னவென்றால் பிரச்சினைகளுக்கான காரணத்தை நீக்குவதாகும் என தெரிவித்ததுடன் பாரம்பரிய அரசியல் நடைமுறைகளின் படி இது கடினமாகும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: