பிரச்சினைகளுக்கு தனிச்சிங்கள சட்டமே மூல காரணம் –  பேராயர் மல்கம் ரஞ்சித்!

Saturday, June 24th, 2017

நாட்டின் இன்றைய பெரும்பாலான பிரச்சினைகளுக்குஇ கடந்த 1958ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனிச்சிங்கள சட்டமே காரணமென இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழர்கள் தம்மை இரண்டாம் தர பிரஜைகளாக கருதும் நிலையையும் இந்த தனிச் சிங்கள சட்டமே உருவாக்கியதென குறிப்பிட்ட பேராயர்இ நாட்டில் மீண்டும் ஒற்றுமையை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றித்து பயணிக்க வேண்டியது அவசியம் என மேலும் தெரிவித்துள்ளார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே பேராயர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வை காண்பது அவசியம் என குறிப்பிட்ட பேராயர் அதற்குஇ இல்லாத ஒன்றைப் பற்றி பேசுவதை விட இனப்பிரச்சினைக்கு தீர்வாக உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுக்கான வழியை தேட வேண்டும் என மேலும் குறிப்பிட்டார்.

Related posts:

ஒக்ரோபருக்கு பின் இலங்கை ஒரு புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் - அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை...
அட்டுலுகம சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!
வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து 14 நாட்களுக்குள் உரிமை மாற்றாவிட்டால் 2000 ரூபா அபராதம் - போக்குவரத்...

இம்மாத இறுதியில் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ....
பாடசாலை மாணவர்களுக்கான தேசியரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வுசார் செயற்றிட்டம் ய...
ஆங்கிலத்தில் இலங்கை சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை - வர்த்தமானியை இரத்துச்செய்ய நாடாளுமன்றில் யோசனை!