பிச்சைக்காரருக்கு கொரோனா – அனுராதபுரத்தில் 81 பிச்சைக்காரர்கள் தனிமைப்படுத்தலில்!
Monday, November 9th, 2020
அனுராதபுரத்தில் பிச்சைக்காரர் ஒருவருக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, நகரத்தில் உள்ள ஏனைய பிச்சைக்காரர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பி.சி.ஆர். சோதனையின் போது கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிச்சைக்காரர் நேற்று அனுராதபுரத்தில் உள்ள புனித நகரத்திற்கு அருகில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள 81 பிச்சைக்காரர்களைச் சுற்றிவளைத்த நகராட்சி அதிகாரிகள் அவர்களைத் தனிமைப்படுத்த உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
3 மாதங்களுக்குரிய அரிசி கையிருப்பில்!
கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!
கடல் மணலை பொதுமக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்ய இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தீர்மான...
|
|
|


