பிசிஆர் பரிசோதனைக்கு 6 ஆயிரத்து 500 : அன்டிஜனுக்கு 2 ஆயிரம் – தனியார் மருத்துவமனைகளுக்கு நிர்ணய விலையை வரையறுத்தது சுகாதார அமைச்சு!

Wednesday, August 11th, 2021

தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் பிசிஆர் சோதனைகளுக்கு அரசாங்கம் அதிகபட்ச விலையை நிர்ணயித்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை 12 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் பவித்ராதுவி வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

அ இதன்படி, தனியார் துறையினரிடம் நடத்தப்படும் PCR பரிசோதனைகளுக்காக 6,500 ரூபாவும், அன்டிஜன் பரிசோதனைக்காக 2000 ரூபாவும் ஆகக்கூடிய கட்டணமாக அறவிட முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வரும் நிலையில் குறித்த பரிசோதனைகளுக்காக வேறுபட்ட அதிகளவான அறவீடுகள் காணப்பட்டுவந்த நிலையில் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: