பால்மாக்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Monday, March 18th, 2019
பால் மா தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் சந்தையில் சில வியாபாரிகள் பால்மாக்களை பதுக்கி வைத்திருப்பதாகவும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் முறையான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு குறித்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என குறித்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பத்தரமுல்லை பிரதேசத்தில் வைத்து வியாபாரி ஒருவர் இது தொடர்பில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இம்மாதம் 21ம் திகதி அவர் கங்கொடவில நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
மக்களே தீர்மானிக்கவேண்டும்- வடக்கின் ஆளுநர் குரே!
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நிறைவு செய்ய தீர்மானம்!
இருளை நீக்கி மனிதர்களிடையே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையாக நத்தார் பண்டிகை அமையட்...
|
|
|


