பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெரிவிப்பு!
Saturday, August 7th, 2021
பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார்.
அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் பெண்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை என்பதனால் அவை தாய்ப்பால் மூலம் பரவுவதற்கான ஆபத்தும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
உண்மையில், தாய்மார்களின் நோய் எதிர்ப்பு சக்தியே தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இனவாதம் பரப்புவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு !
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டிலிருந்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க விடுதலை !
அணிசேரா நாடுகளின் மாநாடு உள்ளிட்ட பல்வேறு மாநாடுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் உகண்டா வியஜம் – ...
|
|
|
பேருந்து முன்னுரிமை வீதிகளில் குறித்த வாகங்களை தவிர்ந்த வேறு வாகனங்களை செலுத்த முடியாது - சாரதிகளுக்...
போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 36 ஆயிரத்து 67 பேர் கைது - 116 மில்லியன் ரூபா தண்டப்பணம் அறிவிடப்பட...
பரீட்சைக்கான திகதிகளில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது - பாடப் புத்தகங்களை வழங்க இந்திய உவி...


