பாதாள உலக குழுக்களின் செயற்பாடுகளை ஒடுக்க 20 விசேட பொலிஸ் குழுக்கள் – பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட காவல்துறை குழுக்களை நிறுவுவதற்கு காவல்துறை மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிதாக நிறுவப்பட்ட குறித்த குழுக்கள் தற்போது செயற்படும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளன.
இதன்படி ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு காவல்துறை மா அதிபர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐ.நாவில் மரண தண்டனையை நிறுத்துவது தொடர்பான யோசனைக்கு இலங்கை ஆதரவாக வாக்களிப்பு!
திருகோணமலை வரோதயநகர் கந்தையா உள்ளக வீதிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் செப்பனிடப்பட்டது...
வடக்கிற்கு செல்லும் வாகனங்களுக்கு ஏ-9 வீதியில் தொற்று நீக்கம்!
|
|