பாடப் புத்தகங்களில் ஏற்படும் மாற்றம் !
Friday, March 6th, 2020
பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களில் அரசியல்வாதிகளின் செய்திகள், புகைப்படங்களை நீக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
கல்வியமைச்சர் எடுத்து இந்த நடவடிக்கைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கால மாற்றங்களுக்கு பொருத்தமான வகையில் முறையான கல்விக்காக தேசிய கொள்கையொன்றை உடனடியாக உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அல்லது கல்வி அமைச்சர் மற்றும் நடைமுறையில் உள்ள அரசாங்கம் மாறும்போது மாற்றம் அடையாத நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக உருவாக்கப்படும் கல்வி முறைமையாக அது அமைய வேண்டுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
மார்ச் மாதம் இரசாயன உரத்தை விநியோகிக்க முடியும் - உர இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவிப்பு!
இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரித்தானியா - இலங்கை அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்க...
இலங்கையின் புதிய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார் ரணில் விக்ரமசிங்க!
|
|
|


