பாடசாலை வாகனத்தின் கட்டணம் அதிகரிப்பு – ஜனவரிமுதல் நடைமுறையில் என பாடசாலை வான் நடத்துநர்கள் சங்கம் அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021

பாடசாலை வாகனத்தின் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை பாடசாலை வான் நடத்துநர்கள் சங்கம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த வருடத்தின் முதலாம் தவணை தொடக்கத்தில் இருந்து இவ்வாறு வான் கட்டணம் அதிகரிக்கப்படும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தினால் சேவையில் தொடர்ந்து ஈடுபட முடியாதுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். எனவே, இம்மாத இறுதியில் இந்த விடயம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: