பாடசாலை மாணவர்களுக்கு Tap – மீண்டும் ஜனாதிபதி ஆட்சேபனை!
Wednesday, June 19th, 2019
பாடசாலை மாணவர்களுக்கு இலத்திரனியல் டெப்லெட்களை வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள புதிய திட்டத்திற்கு மீண்டும் ஜனாதிபதி தமது ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இந்த திட்டத்துக்காக 2275 மில்லியன் ரூபாவை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தின் பரீட்சார்த்த மாதிரி பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தி வருகிறார்.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோர் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் திட்டத்துக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த திட்டத்தின்கீழ் 189,000 டெப்லெட்களை வழங்க முடியும் என்று அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
இளம் தொழிலதிபர் மாயம்: கொல்லப்பட்டாரா என சந்தேகம்?
தடுப்பூசி பெறாதவர்களைத் தேடி வீடு வீடாக பிரசாரம் முன்னெடுப்பு – இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷன...
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு தமிழ்க் கட்சிகள் ஆதரவு - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிப்பு...
|
|
|


