பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
Thursday, April 22nd, 2021
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைகளை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம் அதற்கான விலை மட்டங்களைக் கோரி விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த வருடத்திற்கான பாடசாலைச் சீருடைகளை இந்த வருட இறுதி பாடசாலைத் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
புகையிரத பயணிகளின் பாதுகாப்புக்கு 210 விண்ணப்பங்கள்!
உலகின் மிகப்பெரிய இரத்தினக்கல் சீனாவின் உலகின் புகழ்பெற்ற இரத்தினக்கல் ஏலத்தில் - இராஜாங்க அமைச்சர் ...
இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடைந்த பொருளாதாரமாக மாற்ற கடும் முயற்சி - ஜனாதிபதி ரணில் எதிர்வர...
|
|
|


