பாடசாலைகள் முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!
Thursday, August 20th, 2020
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை முழுமையாக இயங்க வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன.
எனினும் 200 மாணவர்களுக்கு குறைவான தொகைக்கொண்ட பாடசாலைகள் சுகாதார ஒழுங்குவிதிகளின்படி செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் போதுமான வகுப்பறைகளுடன் போதுமான ஆசிரியர்களுடன் பாடசாலைகளில் சமூக இடைவெளிகளை பேணும் வகையில் செயற்படமுடியுமானால் பாடசாலைகளை திறக்குமாறு அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், மாகாண செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர்கள், வலயக் கல்விப்பணிப்பாளர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
மீண்டும் பல்கலைகழகத்தில் மோதல்!
க.பொ.த சாதாரணதர, உயர்தர பரீட்சைகள் தொடர்பில் மீண்டும் வெளியாகியுள்ள தகவல்!
எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் போதைப்பொருள் வர்த்தகமும் பாதாள உலக செயற்பாடுகளும் ஒடுக்கப்படும் - பொது...
|
|
|


