பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்டபில் இன்று தீர்மானம் – கல்வி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை அடுத்து இரண்டாம் தவணைக்காக இலங்கையிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில் பாடசாலைகளை மீண்டும் எப்போது ஆரம்பிப்பது என்பது தொடர்பான தீர்மானம் இன்றையதினம் எடுக்கப்படவுள்ளது.
பாடசாலைகள் மீண்டும் எப்போது ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் கோரிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க பாடசாலைகளில் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நேற்று ஆரம்பிக்கப்பட இருந்தன.
எனினும் நேற்றுமுன்தினம் இலங்கையின் எட்டு இடங்களில் இடம்பெற்றிருந்த குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நேற்றும் இன்றும், பாடசாலைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.
இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே மேற்படி விடயத்தை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
Related posts:
வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு முக்கிய செயற்திட்டங்கள்!
வெளி மாகாணமொன்றில் உயிரிழந்த முதியவரின் உடலை உரிய அனுமதிகளின்றி யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதால...
எதிர்வரும் 2 வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் ஒரு தொகுதி உரம் நாட்டுக்கு - விவசாய அமைச்சு தெரிவ...
|
|
அமைச்சர்களின் வாகனங்கள் குறித்து வாராவாரம் அறிக்கை தேவை! பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி உத்தரவு!
அஸ்வசும நிவாரணப் பயனாளிகளுக்கான ஒகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம...
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க உறு...