பாடசாலைகளை திறப்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டபய ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் தீவிர ஆலோசனை!
Wednesday, May 6th, 2020
மக்களின் அன்றாட வாழ்க்கையை வழமைக்கு கொண்டு வருவதற்கான செயற்றிட்டத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ ஆராய்ந்து வருவதுடன் ஆளுநர்கள் மற்றும் அமைச்சரவையின் செயலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அவர் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளார்.
இதனையடுத்து சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கத்தின் பரிந்துரைக்கு அமைய அரச மற்றும் தனியார் பிரிவுகளின் அனைத்து சேவைகளையும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வலயக் கல்வி பணிப்பாளர்களது பரிந்துரைக்கு அமைய கிராமிய மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளை திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா என ஆராய்ந்து பார்ப்பதற்கும் ஜனாதிபதி இந்த கலந்துரையாடலில் தீர்மானித்துள்ளார்.
மேலும் குறித்த பாடசாலைகளில் நீர், சுகாதார வசதிகள் மற்றும் சுகாதார தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


