பாடசாலைகளைமீளவும் இயங்கவைப்பதில் வடக்குமாகாண சபை அக்கறையற்றிருக்கின்றது – கிளிநொச்சிமாவட்டமக்கள் சுட்டிக்காட்டு!

Tuesday, June 27th, 2017

இயங்கா நிலையிலுள்ள பாடசாலைகளை மீளவும் திறந்து கல்விநடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டு மென்ற தமது கோரிக்கைகள் தொடர்பில் வடக்கு மாகாணசபையும், துறைசார்ந்ததரப்பினரும்அ க்கறையற்றிருக்கின்றமையான துதமக்குமிகுந்த ஏமாற்றத்தைத் தருவதாககிளிநொச்சிமாவட்டமக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சிகல்விவலயத்தில் 112 பாடசாலைகள் இருக்கின்றபோதிலும் தற்போது 104 பாடசாலைகள் இயங்கிவருகின்றன. இருந்தபோதிலும் 08 பாடசாலைகள் இற்றைவரையில் இயங்காதநிலையிலேயேஉள்ளன.

இவற்றில் பூநகரியில்செட்டியாகுறிச்சிஅ.த.கபாடசாலை,கௌதாரிமுனைஅ.த.கபாடசாலை,பொன்னாவெளிசைவப்பிரகாசவித்தியாலயம்,பல்லவராயன்கட்டு இந்துதமிழ்க் கலவன் பாடசாலை,தம்பிராய் அ.த.கபாடசாலை,அத்தாய் முத்துக்குமாரசாமிவித்தியாலயம்மற்றும்கரைச்சிக் கோட்டத்தில் சிங்களமகாவித்தியாலயம்,குஞ்சுக்குளம் பாடசாலைஆகிய 08 பாடசாலைகளும் தற்போது மூடப்பட்டநிலையிலேயேகாணப்படுகின்றன.

கடந்தகாலங்களில் நாட்டில் நிலவியஅசாதாரணசூழ்நிலைகாரணமாககுறித்தபாடசாலைகள் மூடப்படிருந்தநிலையில் இற்றைவரையில் இப்பாடசாலைகள் இயங்காதநிலையிலேயேஉள்ளன. இவற்றை இயங்கவைப்பதற்குநடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

குறித்தபாடசாலைகளைமீளவும் இயங்கவைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடமாகாணசபையிடமும், துறைசார்ந்ததரப்பினரிடமும் பலதடவைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதிலும் இதுவிடயத்தில் எவரும் உரியநடவடிக்கைகளைஎடுக்கவில்லையென்றுபொதுமக்களும்,பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளும் கவலைதெரிவித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: