பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் முன்னெடுப்பு !

திருகோணமலை நகரை அன்மித்த கடற்கரை மற்றும் பவளப்பாறைகளை சுத்திகரிக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தினால் நேற்று (24) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சுற்றுலா பணியகத்தின் தலைவர் ஏ.பீ. மதன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் நகர சுத்திகரிப்பு மாத்திரமல்லாது கடற்கரை மற்றும் கடற்கரையை அண்டிய பிரதேசங்கள் அனைத்து இடங்களிலும் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் திருகோணமலை டைக் வீதியில் அமைந்துள்ள கடற்கரை மற்றும் கடலுக்குள் கற்பாறைகளில் படிந்து காணப்படுகின்ற வலைகள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றுகின்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
இச் சிரமதான பணியில் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், திருகோணமலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சுழியோடிகள் அமைப்பு அனைவரும் கூட்டாக இணைந்து கடலுக்குள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|